Good Bad Ugly: “நான் பிரபு சாருடைய மருமகன்னு சில நேரங்கள்ல மறந்திடுவேன்!'' – ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித்தின் ஃபேன் பாயாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

Adhik Ravichandran Marriage
Adhik Ravichandran Marriage

அஜித்தின் பல ஐகானிக் வசனங்களையும் தியேட்டர் மொமன்டிற்காக படத்தில் சேர்த்திருக்கிறார் ஆதிக்.

கடந்த 2023-ம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றிருந்தது. பிரபுவும் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரபு குறித்து விகடனுக்கு அளித்தப் பேட்டியில் பேசிய ஆதிக், “பிரபு சார் ரொம்ப ஸ்வீட். அவர் ரொம்பவே அப்பாவியான நபர். பிரபு சாருடைய பல திரைப்படங்களையும் நான் பார்த்திருக்கேன்.

அவர்கிட்ட இருக்கிற மாதிரியான ஒரு அப்பாவிதனத்தை வேறு யார்கிட்டையும் பார்க்க முடியாது. நான் பிரபு சாருடைய மருமகன்ங்கிற விஷயத்தையே நான் சில நேரங்கள்ல மறந்திடுவேன். அவர் மிகப்பெரிய இடத்துல இருக்காரு.

ரொம்ப ஸ்வீட்டாக என்னை மாப்பிள்ளையாக ஏத்துகிட்டாரு. அவரை நான் சந்திக்கும்போது `மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகல.

Adhik Ravichandran
Adhik Ravichandran

படத்துடைய ரிலீஸுக்கு ஒரு மாதத்துக்கு முன்னாடிதான் சாரை சந்திச்சேன். பிரபு சாரைப் போலவே ஆண்டியும் ரொம்ப ஸ்வீட். அதே மாதிரிதான் விக்ரம் பிரபு அண்ணாவும் ஸ்வீட்.

`எந்த நம்பிக்கைல சார் எனக்கு ஓகே சொன்னீங்க’னு நான் நிறைய முறை கேட்டிருக்கேன். இந்தப் படத்துல அவர் நடிச்சதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அஜித் சார்கூட ரொம்ப நாளைக்குப் பிறகு அவர் நடிக்கிறதுல அவருக்குமே ரொம்ப ஹாப்பி!

அஜித் சாருக்குமே பிரபு சாரை ரொம்ப பிடிக்கும். அஜித் சாருக்கு நன்றி சொன்னாலே பிடிக்காது. நான் நன்றி சொன்னால் அவர் திட்டுவார்.” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.