Best AC under 30000: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல மாநிலங்களில் 40 டிகிரிக்கு மேல் எட்டியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு வெயிலின் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அனல் பறக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுப்பட பலர் ஏர் கண்டிஷனர் (ஏசி) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மேலும் வெப்பநிலை காரணமாக தற்போது ஏசியின் தேவை அதிகரித்துள்ளது. அந்தவகையில் தற்போது நீங்கள் பட்ஜெட் விலையில், மின்சார சேமிப்புடன் புதிய ஏசி வாங்க விரும்பினால், இந்த கட்டுரையில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இங்கு பல பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் டாப் ஏசியை பற்றி காணப் போகிறோம். அதிலும் இந்த ஏசி ஸ்மார்ட் ப்லேக்சி கூல் இன்வேர்டார் AC ஆகும்.
ஸ்மார்ட் ப்லேக்சி கூல் இன்வேர்டார் AC ஏன் அவசியம்?
இந்தியாவின் பல மாநிலங்களில், இப்போதே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் வரவிருக்கும் மே-ஜூன் மாதங்களில் 45 டிகிரி அல்லது அதற்கு மேல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மின்விசிறி அல்லது கூலர் இந்த வெயிலுக்கு எடுப்படாது. எனவே கொளுத்தும் வெப்பத்திலிருந்து விடுபட, இங்கே பட்டியலிடப்பட்டுள்ள மாடல்களை ஒருமுறை சரிப்பார்க்கவும்.
வெப்பத்திலிருந்து நிவாரணம் தரும் டாப் ஏசிகள்:
சந்தையில் பல பிராண்டுகளின் ஏசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் விற்கப்படுகின்றன.
Blue Star 0.8 Ton 3 Star Inverter Split AC
இந்த ஏசி சிறிய அறைகளுக்கு (90-100 சதுர அடி வரை) ஏற்றது. இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் மின் பயன்பாட்டைக் குறைக்கிறது. நட்சத்திர மதிப்பீடு காரணமாக இது ஆற்றல் திறனின் நல்ல சமநிலையை அளிக்கிறது.
Cruise 1 Ton 3 Star Inverter Split AC
குரூஸ் பிராண்டின் இந்த ஏசி இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் கரண்ட் பில் குறைவாகவே வரும்.
Whirlpool 1.0 Ton 3 Star Split AC
வேர்ல்பூலின் இந்த ஏசி 3 நட்சத்திர மதிப்பீடு குறைந்த மின் பயன்பாட்டை உறுதி செய்கிறது.
Godrej 1 Ton 3 Star Split AC
கோத்ரெஜின் இந்த ஏசி 1 டன் இல் வருகிறது. 3 நட்சத்திர ஆற்றல் கொண்டது.
Daikin 0.8 Ton 3 Star Split AC
ஏசி என்று கூறினால் டெய்கின் முதல் இடம் பிடிக்கும். இந்த மாடல் 0.8 டன் இல் வருகிறது.
Lloyd 1.0 Ton 3 Star Inverter Split AC
லாய்டின் இந்த ஏசி இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகிறது. 3 நட்சத்திர மதிப்பீடு கொண்டுள்ளது.