சென்னை: தமிழ்நாட்டில், அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.7500 கோடியில் புதிதாக 18000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு மாநில நிதியை ஒதுக்கீடு செய்ததற்கு, இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதற்கு என முதல்வரின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பது […]
