Chennai Super Kings vs Punjab Kings: ஐபிஎல் 2025 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளனர். தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். இன்னும் இந்த சீசனில் 10 போட்டிகள் மீதமுள்ள நிலையில் குறைந்தது 7 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். எனவே இனிவரும் போட்டிகள் அனைத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
மேலும் படிங்க: ஜஸ்பிரித் பும்ரா to அஷிஷ் நெஹ்ரா: ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 7 வீரர்கள்!
இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சத்தீஸ்கரில் சென்னை அணி விளையாட உள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பஞ்சாப் கிங்ஸ் இந்த ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது சென்னை அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சென்னை அணியில் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் மற்றும் பில்டிங் சொதப்பலாகவே உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சில அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Battle of the Kings!
Chandigarh, let the whistles begin! #PBKSvCSK #WhistlePodu #Yellove pic.twitter.com/qzchH0BhOb
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2025
சென்னை அணி பிளேயிங் லெவனில் மாற்றங்கள்
சென்னை அணி இந்த ஆண்டு சொதப்புவதற்கு முக்கிய காரணம் டாப் ஆர்டர் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியில் தட்டு தடுமாறி 50 ரன்கள் அடித்திருந்தாலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் ரச்சின் ரவீந்திரா. இதனால் இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ஓப்பனிங் ஜோடியாக டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் ஹிட்டர் தேவை என்பதால் ஜேமி ஓவர்டென் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
இல்லையென்றால் அவருக்கு பதில் அன்சுல் கம்போஜை விளையாட வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல முகேஷ் சவுதிரிக்கு பதிலாக ஒரு கூடுதல் பேட்டரை விளையாட வைக்கலாமா என்று சிஎஸ்கே யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, சாயிக் ரசித் மற்றும் வான்ஸ் பேடி ஆகிய இருவரில் ஒருவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிங்க: பஞ்சாப் போட்டியில் தோனி விளையாட மாட்டார்… வந்தது Exclusive தகவல்!