Reliance Jio vs Airtel vs Vodafone Idea: ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகிய மூன்று நிறுவனங்களும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளன. நாட்டின் இந்த மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு பல்வேறு வசதியான சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி இந்த ரீசார்ஜ் திட்டங்களில் இலவச OTT சந்தா, டேட்டா வழங்கப்பட்டாலும் இதன் நெட்வொர்க் வலிமை ஒவ்வொராக இருக்கும்.
நெட்வொர்க் இணைப்பு (Network Connectivity) சரியில்லை என்றால் இணையத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதேபோல் போனில் அழைப்பி வந்தாலும் நல்ல பேச முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். எந்த வகையில் நீங்கள் வசிக்கும் இடத்தில் எந்த நிறுவனத்தின் நெட்வொர்க் சிறந்த இணைப்பை (Internet) தருகிறது என்பதை எப்படி கண்டறிவது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India – TRAI) வழங்கியுள்ள உத்தரவால் ஜியோ (jio), ஏர்டெல் (airtel) மற்றும் விஐ (Vi) பயனர்களுக்கு பெரிய நிம்மதியை தந்துள்ளது. ஏனெனில் நீங்கள் ஒரு புதிய சிம் வாங்கவோ அல்லது உங்கள் எண்ணை வேறொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு போர்ட் செய்ய நினைத்தாலோ முதலில் உங்கள் ஏரியாவின் நெட்வொர்க்கை எவ்வாறு பெறுவது என்பது குறித்த தகவல்களைப் பெறுங்கள்.
சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் கவரேஜ் (Network Coverage) குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று Telecom Regulatory Authority of India – TRAI அறிவுறுத்தியிருந்தது. இதன் முக்கிய நோக்கமானது பயனர்கள் தங்கள் பகுதிக்கு ஒரு நல்ல நெட்வொர்க் வழங்குநரைத் தேர்வுசெய்ய உதவுவதே ஆகும். அந்த வகையில் திருத்தப்பட்ட சேவைத் தரம் (QoS) விதிகளின் கீழ், இந்த வழிமுறைகள் அக்டோபர் 1 ஆம் தேதி, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் பிறகு மூன்று நிறுவனங்களும் அதாவது ஜியோ (jio), ஏர்டெல் (airtel) மற்றும் விஐ (Vi) தற்போது இந்த சேவையை பயனர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நெட்வொர்க் கவரேஜ் தகவல் map இல் இருந்து கிடைக்கும்:
1. ஏர்டெல் பயனர்கள் Airtel செயலியில் உள்ள ‘Check Coverage’ பிரிவில் இருந்து அல்லது airtel.in/wirelesscoverage/ ஐப் பார்வையிடுவதன் மூலம் சேவையின் நெட்வொர்க் கவரேஜை சரிபார்க்கலாம்.
2. ஜியோ பயனர்கள் ஜியோ செயலியின் ‘Coverage Map’ பிரிவு மற்றும் jio.com/selfcare/coverage-map/ மூலம் நெட்வொர்க் கவரேஜ் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
3. Vi (Vodafone Idea) பயனர்கள் myvi.in/vicoverage ஐப் பார்வையிடுவதன் மூலம் இது பற்றிய தகவல்களைப் பெறலாம்.