அருண் விஜய், சித்தி இதனானி நடிக்கும் `ரெட்ட தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. `மான் கராத்தே’, `கெத்து’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
பிடிஜி நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடி இருப்பதாகப் படக்குழு நேற்று (ஏப்ரல் 8) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இப்பாடலுக்கான படப்பிடிப்பை வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரமாண்டமாக படமாக்கியிருக்கின்றனர். விரைவில் இப்பாடல் லிரிகல், வீடியோ வடிவில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருண் விஜய் தனுஷ் குறித்து தனது எக்ஸ் தளத் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ரொம்பவே உற்சாகமா இருக்கிறது.
Really excited!! Can’t wait for you’ll to listen to the song @dhanushkraja brother has sung for ##RettaThala. I am sure it’s going to mesmerize everyone..Thanks a lot for this wonderful gesture brother.. Loads of love to you..❤️ #KrisThirukumaran @SiddhiIdnani @BTGUniversal… pic.twitter.com/6mVnwnB9fa
— ArunVijay (@arunvijayno1) April 9, 2025
தனுஷ் ‘ரெட்ட தல’ படத்திற்காக பாடினப் பாடலை நீங்க எப்போது கேட்பீர்கள் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புறேன்’ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…