Ashwath Marimuthu: “உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' – அஸ்வத் மாரிமுத்து பதிவு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த `டிராகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபாமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Simbu with Ashwath Marimuthu – Dragon

இத்திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பலருக்கு ஃபேவரைட்டாகிவிட்டார் அஸ்வத் மாரிமுத்து. இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 51-வது படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. சில நாள்களுக்கு முன்பு தனக்கு உதவி இயக்குநர்கள் வேண்டும். உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்கள் தன்னிடம் சேர்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் எனப் பதிவிட்டிருந்தார்.

தனக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எப்படியான தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையான பாணியில் குறிப்பிட்டு பதிவு ஒன்றை அவர் போட்டிருந்தது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து பலரும் நகைச்சுவை பாணியில் பலரும் அவருக்கு பதிலளித்தனர். தற்போது தன்னுடைய மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் விண்ணப்பங்கள் தொடர்பாக அஸ்வத் மாரிமுத்து ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “ உதவி இயக்குநர்களே, உங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்துவிட்டது.

15,000-க்கும் மேற்பட்ட ரிஸியூம்கள் எனக்கு வந்திருக்கிறது. என்னுடைய குழுவினர் உங்களின் ரிஸ்யூம்களை பார்க்கவிருக்கிறார்கள். அதற்கு சில நேரமெடுக்கும். முன்பு 10 உதவி இயக்குநர்களை எடுப்பதற்குதான் நான் திட்டமிட்டேன். ஆனால், இப்போது என்னுடைய அடுத்த இரண்டு திரைப்படங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 20 நபர்களை எடுக்கவிருக்கிறேன். என்னை டேக் செய்து சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் பதிவிடும் அத்தனை நபர்களும் தேர்ந்தெடுக்கும் நடைமுறை இந்த 15,000 நபர்களுக்கும் ஒன்றுதான் என புரிந்துக் கொள்ளுங்கள்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.