அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று(ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

`விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அஜித்துடன் நடிகர் சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ரிலீஸை ஒட்டி, நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எனக்குப் பிடித்த நடிகருடன்(அஜித்) சேர்ந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
Words could mean only little to express my happiness sharing screen space with my idol! Will cherish every moment spent with this ultimate gentleman. Love you #AjithKumar sir. Thank you for this.
Thank you @Adhikravi ❤️
Here comes the King!#GoodBadUgly#GBU pic.twitter.com/fU4ba61O7P— Prasanna (@Prasanna_actor) April 10, 2025
இந்த ஜென்டில்மேன் உடன் செலவிட்ட தருணங்களை எப்போதும் நினைவில் கொள்வேன். இதோ ராஜா வந்துவிட்டார் ” என்று பதிவிட்டு அஜித்தின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…