சிட்ரோன் ஏர்கிராஸ் டார்க் எடிசன் ரூ.13.13 லட்சத்தில் ஆரம்பம்.! | Automobile Tamilan

சிட்ரோன் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 5+2  இருக்கை அமைப்பினை பெற்ற ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் டார்க் எடிசன் விலை ரூ.13.13 லட்சம் முதல் ரூ.14.27 லட்சம் வரை அமைந்துள்ளது.


CItroen Aircross Dark Edition

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

You ₹ 862000
Plus ₹ 999000
Turbo Plus ₹ 1215300
Turbo Plus 5+2 ₹ 1250300
Turbo Max ₹ 1290800
Turbo Max Dual Tone ₹ 1310800
Turbo Max 5+2 ₹ 1325800
Turbo Max Dual Tone 5+2 ₹ 1345800
Turbo AT Plus ₹ 1345300
Turbo AT Max ₹ 1404800
Turbo AT Max Dual Tone ₹ 1424800
Turbo AT Max 5+2 ₹ 1439800
Turbo AT Max Dual Tone 5+2 ₹ 1459800
Turbo Max Dark Edition ₹ 13,13,300
Turbo AT Max Dark Edition ₹ 14,27,300

(எக்ஸ்-ஷோரூம்)

முழுமையாக கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கிரில் உட்பட பாடி முழுவதும் கருமையாக அமைந்துள்ளது. ‘DARK’ பேட்ஜிங் கொண்டு இன்டிரியரில் கருப்பு நிறத்துடன் தோல் இருக்கைகள் மற்றும் கதவு ஆர்ம்ரெஸ்ட்கள், ஆம்பியன்ட் விளக்குகள், சீட் பெல்ட்களுக்கான பிராண்ட்-பேட்ஜ் செய்யப்பட்ட குஷன் மற்றும் ஒளிரும் சில் பிளேட்டுகள் உள்ளன.

citroen aircross dark edition interior


மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் பாசால்ட், சி3 மாடல்களும் வந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.