டெல்லி நாளை இத்தாலிய துணை பிரதமர் அண்டானியோ தஜானி 2 நாள் சுற்றுபயணமாக இந்தியா வருகிறார். இந்தியாவில் இத்தாலியின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி நாளை அவர் அந்நாட்டில் இருந்து புறப்பட்டு புதுடெல்லிக்கு வருகை தருகிறார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். […]
