ம.பி.யில் மாணவர்களின் விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை

போபால்: ம.பி.​யின் நர்​ம​தாபுரம் மாவட்​டம், பிபரியா என்ற இடத்​தில் பகத் சிங் அரசு கல்​லூரி உள்​ளது. இக்​கல்​லூரி தேர்வு விடைத்​தாள்​களை கடைநிலை ஊழியர் ஒரு​வர் திருத்​தும் வீடியோ சமூக வலை​தளத்​தில் வெளி​யாகி அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவ​காரத்​தில் கல்​லூரி முதல்​வர் ராகேஷ் வர்​மா, விடைத்​தாள் திருத்​தும் பணிக்​கான பொறுப்பு அதி​காரி ராம்​குலம் படேல் ஆகிய இரு​வரும் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் விஷ்​வாஸ் சாரங் தெரி​வித்​தார்.

கல்​லூரி முதல்​வர் ராகேஷ் வர்மா கூறுகை​யில், “விடைத்​தாள் திருத்​தும் பணியை பேராசிரியர் ஒரு​வரிடம் கொடுத்​தோம். அவர் அப்​பணியை கடைநிலை ஊழியரிடம் கொடுத்​துள்​ளார். எனது சஸ்​பெண்ட் உத்​தரவை திரும்​பப் பெறவேண்​டும் என கோரி உயர்​கல்​வித் துறைக்கு கடிதம்​ எழு​தி​யுள்​ளேன்” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.