பிஹாரில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் நேற்று இடி, மின்​னலுடன் பலத்த மழை பெய்​தது. மணிக்கு 50 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசி​யது. அப்​போது சீவான், பெகு​சா​ரை, பாகல்​பூர், ஜெக​னா​பாத், முஷாபர்​பூர், சகர்​ஷா, மதேபூ​ரா, சாப்ரா உள்​ளிட்ட பகு​தி​களில் மின்​னல் தாக்கி 28 பேர் உயி​ரிழந்​தனர்.

பிஹாரின் நாளந்தா பகு​தி, இஸ்​லாம்​பூரில் ஒரு வீட்​டின் சுவர் இடிந்து விழுந்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். விஷ்ணுபூர், நூர்​ச​ராய், செயின்​புரா உள்​ளிட்ட பகு​தி​களில் சுவர் இடிந்​து, மரங்​கள் முறிந்து விழுந்து மேலும் 14 பேர் உயி​ரிழந்​தனர். மின்​னல் மற்​றும் மழை பாதிப்​பால் பிஹாரில் நேற்று ஒரே நாளில் 46 பேர் உயி​ரிழந்​தனர். மழை பாதிப்​பு​களால் உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.4 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​படும் என்று முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார்.

உ.பி.​யில் 6 பேர் உயி​ரிழப்பு: உத்தர பிரதேசத்​தில் லக்​னோ, வாராணசி, கான்​பூர், கோரக்​பூர் உட்பட 25 நகரங்​களில் நேற்று கனமழை பெய்​தது. அப்​போது மின்​னல் தாக்கி 6 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த பயிர்​கள் நாச​மாகி உள்​ளன. பல்​வேறு இடங்​களில் மரங்​கள் முறிந்து மின் கம்​பிகள் அறுந்​தன.

இதனால் நொய்​டா, கான்​பூர் உட்பட பல்​வேறு பகு​தி​களில் மின் விநி​யோகம் துண்​டிக்​கப்​பட்டு உள்​ளது. உத்தர பிரதேசம், பிஹாரில் அடுத்த சில நாட்​களுக்கு பலத்த காற்​று, இடி, மின்​னலுடன் மழை பெய்​யும் என்று வானிலை மையம்​ எச்​சரிக்​கை விடுத்​து உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.