இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டம் வந்தன்மேடுவில் முஸ்லிம் கல்விச் சங்க மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியை சாய்னபா பீவி கடந்த மார்ச் 31-ம் தேதி, பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு 9-ம் வகுப்பு மாணவர்கள் உருக்கமான பிரியாவிடை அளித்தனர்.
அப்போது சாய்னபா பீவியின் வேண்டுகோளை ஏற்று, ஒவ்வொரு மாணவரும் அவரது தலையில் கைவைத்து போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்காக அம்மாணவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார். சாய்னபா பீவி போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார்.