2025 ஏப்ரல் 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர் படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக…
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
சென்னையின் ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூர் பகுதி மென்பொருள் நிறுவனங்களின் பூங்கா என்றே அறியப்படுகிறது. எனினும் அங்கே சோழர்கள் காலம்தொட்டே அமர்ந்து ஆட்சி செய்து வருகிறாள் அருள்மிகு படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன். ஒரு காலத்தில் இந்த பகுதி விளைச்சல் மிகுந்த பகுதியாக இருந்தபோது எல்லை தெய்வமாக இருந்து காவல் புரிந்தவள் இந்த பரமேஸ்வரி. இன்றும் பக்தர்களின் அபய சரணாலயமாக விளங்கி வருகிறது பரமேஸ்வரி ஆலயம்.
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள். குறிப்பாக தொழில்-வியாபார விருத்தி அளிக்கும் தாய் இவள் என்கிறார்கள். பெண்களுக்கு மாங்கல்ய பலமும் குழந்தைகளின் நோய் தீர்க்கும் மருத்துவமும் இவள் அளிக்கிறாள் என்று பூரித்துப் போகிறார்கள்.

ரேணுவின் மகளாகப் பிறந்து ஜமதக்னி முனிவரின் மனையாளாக இருந்து திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமரை ஈன்றவள் ரேணுகாதேவி என்கிறது புராணம். ஒரு பெண்ணாகப் பிறந்து இன்ப துன்பங்களை அறிந்தவள் இந்த சக்தி. அதனால் இவளை வணங்க பெண்களின் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இவளை வேண்டிக்கொண்டால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மனமுருகி வேண்டி, 5 வாரம் கோயிலைச் சுற்றி வந்து வழிபட்டு 6-வது வாரம் இவளிடம் குங்குமம் வாங்கிச் சென்றால் எல்லா துன்பங்களும் தீரும்; எல்லா வளங்களும் நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
வேண்டியதை வேண்டியவாறே அருளும் இந்த அன்னையை திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். ‘கவலைகள் தீரும்’ ‘திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; ரேணுகா பரமேஸ்வரியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்’ என்கிறார்கள் பக்தர்கள்.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07