ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில் , சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சென்னை – கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 3 நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்ததுடன், அவர்களிடம் இருந்த 11 டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.