Actor Sri: ஆபாச கேப்ஷன்; ஆளே மாறிப்போன ஶ்ரீ… ரசிகர்கள் வருத்தம்!

இணையத்தில் பரவிவரும் நடிகர் ஶ்ரீ -யின் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

முடியின் நிறத்தை மாற்றிவிட்டு உடல் மெலிந்து காணப்படும் ஶ்ரீயின் தோற்றம் பரிதாமளிப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இது புதிய படத்துக்கான தோற்றமாக இருக்கலாமோ என சிலர் எண்ணுகின்றனர். பலரும், அவரது உடல் நிலை மோசமாகியிருக்கலாம் என்று எண்ணுவதாக பதிவிட்டு வருகின்றனர்.

இறுகப்பற்று படத்தில் ஶ்ரீ

திரையுலகில் இப்போது ஶ்ரீ எந்த படத்திலும் நடித்துவருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் மன அழுத்தத்தில் இருக்கலாம் என்றும் சில சந்தேகிக்கின்றனர்.

Actor Sri

சின்னத் திரையில் ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ எனும் ஶ்ரீராம் நடராஜன். வழக்கு எண் 18/9, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமான நடிகராக உருவாகிவந்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்தில் நடித்திருந்தார்.

Shriram Natrajan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஶ்ரீ, இரண்டு நாவல்கள் எழுதியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஶ்ரீ நடித்த திரைப்படத்துக்கு அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. முன்னதாக அவர், இறுகப்பற்று படத்துக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னையால் தற்போது தனியாக வசித்துவருவதாகவும், யாரையும் தொடர்பு கொள்ளவதில்லை என்றும் கூறப்படுகிறது.

சில பதிவுகளில் “நிலையான பாலினம் அற்றவர் (Gender Fluid) எனதன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

அவர் சமீபத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் ஆபாசமாக கேப்ஷன் பதிவிட்டிருந்ததும் பேச்சு பொருளாகியுள்ளது.

ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரையுல நட்சத்திரங்களை டேக் செய்து ஶ்ரீ -க்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.