ஐபிஎல் கெத்து காட்டும் மூன்று பிளேயர்கள்…. பிசிசிஐக்கு புது தலைவலி..!

IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் வெகுச்சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் 6 போட்டிகளை விளையாடி முதல் பாதியை சீசன் விரைவில் கடக்க உள்ளன. பெரிய எதிர்பார்ப்புகளுடன் இரண்டாம் பாதி சீசனை அணிகள் ஆட உள்ளன. இதற்கிடையே இந்த சீசனில் இந்திய பிளேயர்கள் மூன்று பேர் படு சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் மூன்று பேரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் டி20 இந்திய அணிக்கான லிஸ்டில் இல்லை. அதனால், அடுத்ததாக நடைபெறும் தொடர்களில் இவர்கள் மூன்று பேரையும் தேர்வு செய்யாமல் விட முடியாது. அதனால் யாரை நீக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறப்பாக விளையாடும் மூன்று பிளேயர்களை இங்கே பார்க்கலாம். 

ஸ்ரேயாஸ் அய்யர்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் அண்மைக்காலமாக இந்திய அணியின் டி20 டீமில் இடம்பெறவில்லை. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கிறார். அதிரடியாக ஆடும் அவர் கேப்டன்சியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் கீழ் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்து வரும் டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யரை பிசிசிஐ கட்டாயம் சேர்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார். குழந்தை பிறப்பு காரணமாக சில போட்டிகளில் ஆடாத அவர், டெல்லி அணிக்கு வந்தது முதல் அதிரடி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 90க்கும் மேல் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்த அவர், இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய பிளேயர்கள் பட்டியலிலும் டாப் 5ல் இருக்கிறார். இப்போது இருக்கும் பார்ம் காரணமாக இவரையும் இந்திய அணியில் எடுக்காமல் விட முடியாது என்ற நிலை உள்ளது. பிசிசிஐ என்ன செய்யப்போகிறது என தெரியவல்லை.

அபிஷேக் சர்மா

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரராக இருக்கிறார் அபிஷேக் சர்மா. சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருக்கும் இவர், முதலில் பார்மில் இல்லாமல் இருந்தாலும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் திடீரென பார்முக்கு திரும்பி உட்சக்கட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இல்லை, ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். 54 பந்துகளில்  141 ரன்களை குவித்தார். இப்போது இவரும் செம பார்மில் இருக்கிறார்.

இந்த மூன்று பிளேயர்களும் செம பார்மில் இருப்பதால் இவர்களை எடுக்காமல் இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவிக்க முடியாது. அதனால் யாரை அணியில் இருந்து நீக்கலாம் என பிசிசிஐ இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.