நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 13) ஜெய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். ஆனால் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களம் வந்த ரியான் பராக் – ஜெய்ஸ்வாலுடன் கைக்கோர்த்தார். இருவரும் அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ரியான் பராக் 30 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த துருவ் ஜுரல் கடைசி வரை களத்தில் நின்று 35 ரன்களை சேர்த்தார்.
இதற்கிடையில், ஜெய்ஸ்வால் 75 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்வர், யாஷ் தயால், ஹெசில்வுட் மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்களை எடுத்தனர். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
தொடக்க வீரர்களான ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி களம் இறங்கிய நிலையில், இருவரும் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துக்களை பவுண்டரிகளுக்கு அனுப்பினர். குறிப்பாக ஃபில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து 92 ரன்கள் சேர்த்த நிலையில், ஃபில் சால்ட் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் கோலியுடன் சேர்ந்து ரன்களை குவித்தார்.
விராட் கோலியும் அரைசதத்தை கடந்தார். பெங்களூரு அணி 174 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றது. விராட் கோலி 62 ரன்களும் படிக்கல் 40 ரன்களும் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றனர். இதனால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஈசியாக வென்றது. பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மேலும் படிங்க: CSK: சிஎஸ்கேவில் 4 அதிரடி மாற்றங்கள்! அணிக்குள் வரும் இளம் வீரர்கள்!
மேலும் படிங்க: அபிஷேக் சர்மா 6 மேட்சுகளாக அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார் – டிராவிஸ் ஹெட்