இனி கேமரா நடக்கும், ஓடும்… நாயை போல் சேட்டை செய்யும் – வேற லெவலுக்கு போகும் ஐபிஎல்

IPL Pet Vision Camera: கிரிக்கெட் விளையாட்டை வேறு தளத்திற்கு கொண்டுசெல்லும் தொடராக ஐபிஎல் இருந்து வருகிறது. கால்பந்திற்கு இணையாக பொருளாதார அளவில் கிரிக்கெட் இன்னும் அந்த உயரங்களை தொடவில்லை என்றாலும் கிரிக்கெட்டை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க ஐபிஎல் தொடர் தான் முக்கிய கருவியாக செயல்படுகிறது.

அமெரிக்காவில் நடைபெறும் Major League Cricket தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ILT20 தொடர் என கிரிக்கெட் பெரியளவில் பிரபலமில்லாத நாடுகளில் கூட டி20 கிரிக்கெட் சென்றடைந்திருக்கிறது என்றால் அதற்கு ஐபிஎல் முக்கிய காரணம் எனலாம். டி20 கிரிக்கெட்டை சுற்றியுள்ள வணிகத்தை விரிவுப்படுத்தி, பல்வேறு முயற்சிகளையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

IPL Pet Vision Camera:  புதிய ரோபாட்டிக் கேமரா 

கடந்த சில ஆண்டுகளுக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் வீரர் விதி, வைட் மற்றும் நோ-பால் ரிவ்யூக்கள், தற்போது வீரர்கள் கொண்டுவரும் பேட்டின் அளவை சோதிக்கும் முறை என கிரிக்கெட் உலகை விட ஐபிஎல் சற்று முன்னோக்கியே பயணித்து வருகிறது. ஐபிஎல் விதிகள் கூட சர்வதேச கவனத்தை ஈர்க்கின்றன எனலாம். கிரிக்கெட்டில் புது புது விஷயங்களை முயற்சித்து வரும் ஐபிஎல் தொடரில் அதன் ஒளிபரப்பு குழு புதிய ரோபோட்டிக் கேமராவை நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.

IPL Pet Vision Camera: கேமராவை பார்த்து வீரர்களின் ரீயாக்ஷன் என்ன?

செல்லப்பிராணியின் தோற்றத்தில் இருக்கும் கேமரா Pet Vision கோணத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Stump Cam, Spider Cam போன்று இந்த Pet Vision கேமராவும் போட்டியை புதிய கோணத்தில் கண்டுரசிக்க வழிவகை செய்யும். நேற்றைய டெல்லி – மும்பை போட்டியின் பயிற்சியின் போது வீரர்கள் மத்தியில் இந்த கேமராவை ஒளிபரப்பு குழுவினர் கொண்டுசென்றனர்.

 

P.S: Can you help us in… pic.twitter.com/jlPS928MwV

— IndianPremierLeague (@IPL) April 13, 2025

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லமாக இந்த கேமராவை கவனித்துக்கொள்ள, டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேலோ ‘என்னடா இது’ என்ற எண்ணத்தில் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த ரோபோட்டிக் கேமரா டக்கென நாய் போல் எழுந்து நிற்கும். அப்படி எழுந்தபோது மும்பை இந்தியன்ஸ் பௌலர் ரீஸ் டோப்ளி சற்று பயந்துவிட்டார். இவை அனைத்தும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட வீடியோவில் பதிவாகியிருந்தது.

IPL Pet Vision Camera: இனி கேமரா நடக்கும், ஓடும் 

வர்ணனையாளர் டேனி மோரிசன் அந்த கேமராவை, நாயை அழைத்துச் செல்வது போன்ற கழுத்தில் கயிறு கட்டி அழைத்துச் செல்வதும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இந்த Pet Vision கேமரா குறித்து ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ தளத்தில்,”ஐபிஎல் தொடரின் புதிய குடும்ப உறுப்பினர் இப்போது எங்களுடன் இருக்கிறார். இது நடக்கும், ஓடும், குதிக்கும், உங்களுக்கு ஒரு இதயம் நிறைந்த புன்னகையை கூட தரும்

மேலும்… ஒரு புதிய பார்வையையும் வழங்கும்…. ஐபிஎல் ஒளிபரப்பு குடும்பத்தின் புதிய உறுப்பினரைச் சந்திக்கவும்” என குறிப்பிட்டிருந்தனர். இந்த Pet Vision கேமராவை ஜிகர் மேத்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த Pet Vision கேமராவுக்கு பெயரை பரிந்துரைக்கும்படி மக்களிடம் கேட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு ஏதும் பெயர் தோன்றினால் அதனை கமெண்டில் சொல்லுங்க…

மேலும் படிக்க | ஐபிஎல் கெத்து காட்டும் மூன்று பிளேயர்கள்…. பிசிசிஐக்கு புது தலைவலி..!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.