தைவான் நாட்டைச் சேர்ந்த மின்னணு உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான், வட இந்தியாவில் தனது முதல் வசதியை அமைப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலை பெங்களூரில் அமையவிருக்கும் தொழிற்சாலையை விட பெரியது என்றும் இது உலகளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்காக யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்துடன் (YEIDA) பேச்சுவார்த்தை […]
