LSG vs CSK : வேலைக்காகாத மிடில் ஆர்டர்; எகிறிய ரன்ரேட்; எப்படி போட்டியை வென்றார் தோனி?

‘சென்னை வெற்றி!’

ஒருவழியாக சென்னை அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டுவிட்டது. லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வென்றிருக்கிறது. ஆனால், அவ்வளவு எளிதாகவெல்லாம் வெல்லவில்லை. அவர்களின் ட்ரேட்மார்க் ஸ்டைல்படியே கடைசி வரை ப்ரஷர் ஏற்றியே வென்றிருக்கின்றனர். சென்னை அணி எப்படி வென்றது? குறிப்பாக டெத் ஓவர்களில் தோனியும் சிவம் துபேயும் எப்படி போட்டியை முடித்து வைத்தார்கள்?

Dhoni
Dhoni

‘மிடில் ஓவர் சொதப்பல்!’

சென்னை அணி பவர்ப்ளேயில் 59 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணி இப்போது இருக்கும் நிலையில் இது ரொம்பவே நல்ல ஸ்கோர். மேலும் டார்கெட்டும் 160 யை சுற்றியதுதான் என்பதால் இது நல்ல பவர்ப்ளேதான். முதல் 6 ஓவர்களில் கிடைத்த மொமண்டமை அப்படியே தக்கவைத்து சிறப்பாக ஆடி 2-3 ஓவர்களை மீதம் வைத்து சென்னை வென்றிருக்க வேண்டும். ஆனால், அந்த எண்ணமெல்லாம் சென்னையின் மிடில் ஆர்டருக்கு இல்லவே இல்லவே இல்லை.

முதல் 6 ஓவர்களில் 59 ரன்களை எடுத்திருந்த சென்னை அணி அடுத்த 9 ஓவர்களில் 52 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஓவருக்கு 6 ரன்கள் கூட வரவில்லை. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவ்வளவு மோசமான பேட்டிங். எய்டன் மார்க்ரம், திக்வேஷ், ரவி பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்கள்தான் இந்த 9 ஓவர்களையும் வீசியிருந்தனர்.

Jadeja
Jadeja

‘பவுண்டரியே இல்லை!’

இந்த 9 ஓவர்களுக்குள் ஒரு 26 பந்துகளுக்கு தொடர்ச்சியாக பவுண்டரியே இல்லாமல் இருந்தது. ராகுல் திரிபாதி திணறித் திணறி அவுட் ஆனார். விஜய் சங்கர் திணறித் திணறி அவுட் ஆனார். பேட்டிங் ஆர்டரில் மேலே வந்திருந்த ஜடேஜாவாலும் ஸ்பின்னர்களை அவ்வளவு எளிமையாக எதிர்கொள்ள முடியவில்லை. அவரும் திணறிதான் அவுட் ஆனார். சிவம் துபே அவுட் ஆகவில்லை. ஆனாலும் திணறினார்.

Dhoni
Dhoni

அவரால் பந்துகளை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. கடைசி 5 ஓவர்கள் எஞ்சியிருக்கையில் சிவம் துபே 17 பந்துகளில் 20 ரன்களை அடித்திருந்தார். கையிலிருந்த ஒரு போட்டியை மிடில் ஓவர்களில் கோட்டைவிட்டு டெத் ஓவர்களில் போட்டி எந்த பக்கமாக வேண்டுமானாலும் செல்லலாம் எனும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர்.

‘பரபர க்ளைமாக்ஸ்!’

கடைசி 5 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவை. அதாவது ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் தேவை. இரண்டு அணிகளுக்குமே வாய்ப்பு இருந்தது. இந்த சமயத்தில்தான் தோனி வந்தார். தோனிக்கு வயதாகிவிட்டது. அவரால் பேட்டிங் ஆர்டரில் மேலே வர முடியவில்லை. அவரால் முன்பைப் போல பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை என்கிற விமர்சனங்களெல்லாம் இருக்கத்தான் செய்கிறது.

Dhoni
Dhoni

அவை நியாயமானவையும் கூட. ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒத்துக்கொண்டேதான் ஆக வேண்டும். தோனி அவர் விரும்புவதை போல அவரின் வயதுக்கு ஏற்றவாறு கடைசி 5-6 ஓவர்களில் இறங்கினால் தோனி இன்றைக்குமே எந்த அணியையும் அலற விடும் அபாயமான வீரர்தான். அதை இந்தப் போட்டியிலும் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருந்தார்.

மிடில் ஓவர்களில் போட்டியை தாரை வார்த்துவிட்டார்கள். களத்தில் நிற்கும் சிவம் துபேவால் சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. அழுத்தமான சூழல்தான். ஆனாலும் தோனி எந்த பதற்றமும் இல்லாமல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடினார். உள்ளே இறங்கிய அந்த 16 வது ஓவரிலேயே ஆவேஷ் கான் வீசிய பந்தில் இரண்டு பவுண்டரிக்களை அடித்து ரன்ரேட் அழுத்தத்தை குறைத்தார்.

ஷர்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஸ்லோயர் ஒன்னை ஒற்றைக் கையில் சிக்சராக மாற்றினார். இதெல்லாம் போட்டியை அப்படியே சென்னைக்கு நெருக்கமாக கொண்டு வந்தது. ரிஷப் பண்ட் கையில் தோனியை கட்டுப்படுத்த இரண்டு ஆயுதங்கள்தான் இருந்தது. ஒன்று ஸ்லோயர் ஒன்கள். இன்னொன்று ஒயிடு அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் டெலிவரிக்கள். அதற்கேற்றவாது.

Dhoni
Dhoni

டீப் பாய்ண்ட், டீப் பேக்வர்ட் பாய்ண்ட், டீப் மிட் விக்கெட், லாங் ஆன் லாங் ஆப் என வைத்து வீசினார். ஒயிடு டெலிவரியை அப்படியே ஆப் சைடில் கனெக்ட் செய்தால் பாய்ண்ட்டில் சிக்க வைக்கலாம். தோனி ஒரு காலை ஆப் சைடில் எடுத்து வைத்து லெக் சைடில் மடக்கினால் டீப் மிட் விக்கெட்டில் பிடிக்கலாம். அப்படியே நேராக அடித்தால் லாங் ஆன், லாங் ஆபில் பிடிக்கலாம் என்பதே பண்ட்டின் திட்டம்.

ஆனால், இதில் எதிலுமே சிக்காமல் தோனி 4 பவுண்டரிக்களையும் 1 சிக்சரையும் அடித்தார். தோனி சரியான பினிஷுக்கு செட் செய்து கொடுக்க 19 வது ஓவரில் ஒரு நோ-பால் சிக்க அதை சிக்சராக்கி துபேவும் நல்ல டச்சுக்கு வந்தார். அந்த ஓவரிலும் தோனி ஒரு பவுண்டரியை அடித்திருந்தார். கடைசி ஓவரில் 5 ரன்கள்தான் தேவை எனும் போது சிவம் துபே பவுண்டரி அடித்து போட்டியை முடித்துக் கொடுத்தார்.

Dhoni - Dube
Dhoni – Dube

தோனி ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறுவார். ரவி பிஷ்னோயுக்கு ஓவர் இருந்தும் பண்ட் கொடுக்காமல் விட்டது தவறாகிவிட்டது. கடைசி ஓவர்களை பற்றி சிவம் துபே பேசுகையில், ‘தோனி உள்ளே வந்து அடிக்க ஆரம்பித்தவுடன் எனக்கு கொஞ்சம் இலகுவானது. நான் கொஞ்சம் ஷாட்களை ஆட நினைத்தேன். அப்படி ஆட இயலாவிட்டாலும் தவறாக முயன்று ஆடி விக்கெட்டை விட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.’ எனக் கூறியிருக்கிறார்.

தோனி 11 பந்துகளில் 26 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 236. தோனியின் இந்த ஆட்டம்தான் சென்னை அணி தொடர் தோல்விகளிலிருந்த் மீள பெரிய அளவில் உதவியிருக்கிறது. இன்றைய ஆட்டத்தின் வெற்றி குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.