லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ஐந்து போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை அணிக்கு இந்த வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது. கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக சென்னை அணியில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. அஸ்வினுக்கு பதிலாக ஓவர்டன்னும்,டேவான் கான்வேக்கு பதிலாக அவரது இடத்தில் ஷேக் ரஷீத்தும் விளையாடினார்கள்.
மேலும் படிங்க: இனி கேமரா நடக்கும், ஓடும்… நாயை போல் சேட்டை செய்யும் – வேற லெவலுக்கு போகும் ஐபிஎல்
யார் இந்த ஷேக் ரஷீத்?
தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷேக் ரஷீத். 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 27-ல் அடித்து ஆட்டம் இழந்தார். 20 வயதாகும் இளம் வீரரான ஷேக் ரஷீத் ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலக கோப்பை போட்டியில் செமி பைனல் மற்றும் பைனலில் சிறப்பாக விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து ஐபிஎல்லில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2024 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 30 லட்சத்திற்கு அணியில் எடுத்தது.
షేక్కి సోమవారం #LSGvCSK #WhistlePodu #Yellovepic.twitter.com/bfOOPBajnR
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2025
ருதுராஜ் கைகுவாட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதில் ஒரு மாற்று வீரரை சென்னை அணி தேடி வந்தது. தற்போது அவரைப் போலவே ஒரு வீரர் சென்னை அணிக்கு ஓப்பனிங் கிடைத்துள்ளார். ஷேக் ரஷீத் பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஷாட்கள் அனைத்தும் ருதுராஜ் கைகுவாட் போலவே இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். முதல் போட்டியில் தவறான ஒரு ஷாட் ஆடி அவுட் ஆகிய நிலையிலும் அனைவரும் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பதிவு செய்துள்ளார் ஷேக் ரஷீத். இந்த சீசன் முழுவதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் ரஷீத் இதுவரை 19 முதல் தர போட்டிகளில் விளையாடி 37.62 சராசரி மற்றும் 46.04 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1204 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடங்கும். மேலும் 17 டி20 போட்டிகளில் விளையாடி 29.33 சராசரியில், 127.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 352 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.
மேலும் படிங்க: டெல்லி அணி கேப்டன் அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்.. என்ன காரணம்?