“பெப்சி-யின் தவறான வழிகாட்டுதல்; படப்பிடிப்புக்கு யூனிட் அனுப்பமாட்டோம்!'' – அசோசியேஷன் அறிக்கை

படப்பிடிப்புக்கு தேவையான லைட்ஸ், ஜெனரேட்டர், பேந்தர், கிரிப்ஸ் உட்பட அனைத்து உபகரணங்களையும் வழங்குவது அவுட்டோர் யூனிட்தான். தற்போது பெப்சி அமைப்பு ஏற்படுத்திய சிக்கல்களுக்காக இன்று முதல் படப்பிடிப்பு தளங்களுக்கு அவுட்டோர் யூனிட் அனுப்பமாட்டோம் எனக் கூறியிருக்கிறது தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன்.

Camera - Representational Image
Camera – Representational Image

பெப்சி அமைப்புடனான இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும்வரை படப்பிடிப்பு தளங்களுக்கு அவுட்டோர் யூனிட் அனுபப்படாது எனக் கூறப்பட்டிருக்கிறது. அதிலும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு மட்டும் அவுட்டோர் அனுப்பப்படமாட்டாது எனக் கூறியிருக்கிறது இந்த அசோசியேஷன்.

இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன், “தொழில் யாருக்கும் பாதிப்புமின்றி நடந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் சம்மேளத்தின் நிர்வாகிகளாக ஆர்.கே.செல்வமணி மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் வந்த பிறகு கடந்த 6 வருடங்களுக்கு முன் எங்கள் அவுட்டோர் யூனிட்டுக்கு மட்டும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழகத்துக்கு வரவழைத்து தொழில் செய்வதற்கு அவர்கள் இருவரும் உறுதுணையாய் செயல்பட்டனர்.

rk selvamani

தமிழ் திரையை மட்டுமே நம்பி தொழில் செய்து கொண்டிருக்கம் எங்கள் உறுப்பினர்களின் தொழில் ஆதாரத்தை முடக்க செய்வதற்கான அவர்கள் செய்த முதல் வேலையாகும்.

இதை கட்டுப்படுத்த பல கட்ட சந்திப்புகள், கூட்டங்கள் நடத்தியும் இன்றுவரை அதற்கான தீர்வு காணபடவில்லை. தற்பொழுது மேற்சொன்ன பிரச்னை போதாதென்று, தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் ஏற்பட்ட மோதலினால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிய தொழிலாளர் சம்மேளனம் உருவாக ஒத்துழைப்பு கொடுக்கிறது.

அனைவருக்கும் வேலை மற்றும் தொழில் வழங்கி சம்பளம் கொடுப்பவர்கள் அவர்கள்தான். தயாரிப்பாளர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் அவர்கள் வேண்டுகோள் வைக்கும் போது நாங்களும் அதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன்
தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன்

இதை பொருத்துக்கொள்ளாத பெப்சி தலைமை, லைட்மென் சங்கத்தை எங்கள் தொழிலுக்கு எதிராக தூண்டிவிட்டு படப்பிடிப்புக்கு உபகரணங்கள் செல்ல விடாமல் தடுக்கிறார்கள், இதனால் கடந்த 07.04.25 முதல் தொடர்ந்து அவர்களால் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது.

எங்களின் மூன்று உறுப்பினர்களுக்கு, Non-Coperation அறிவித்திருக்கிறார்கள். எங்களது மற்ற ஒரு உறுப்பினர் தயாரிக்கும் திரைப்பட படப்பிடிப்பு நடை பெறும் தளத்துக்கே சென்று, மின் விளக்குகளை கீழே தள்ளி. தடுக்க வந்தவரை அடித்து, பெரும் கலாட்டா செய்திருக்கிறார்கள்.

வேலை கொடுப்பவர்களையே, தரம் தாழ்ந்து பேசுவதும், உபகரணங்களை சேதம் ஏற்படுத்துவதும், தடுக்க வருபவரை அடிப்பதும், சரியான செயலா? இதற்கெல்லாம் காரணமான பெப்ஸி நிர்வாகம் என்ன சொல்லப் போகிறது?

பெப்ஸி தலைமையின் தவறான வழிகாட்டுதலால், ஏதுமறியாத ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்யப்போகிறார்கள்.

தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன்
தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன்

திரைத்துறையில் உள்ள அனைவரும் தாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு பெப்ஸி நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்களால் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை.

இதற்கெல்லாம் தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே, எங்களது அவுட்டோர் யூனிட் அசோசியேஷன், உபகரணங்களை படப்பிடிப்புகளுக்கு அனுப்புவதில்லை என்கிற தவிர்க்க முடியாத முடிவுக்கு வந்துள்ளது!” எனக் கூறியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.