18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வந்தது. ருதுராஜ் தலைமையில் விளையாடி வந்த சென்னை அணி கடந்த இரு போட்டிகளில் தோனி தலைமையில் விளையாடி வருகிறது. ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் சென்னை அணி நேற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இறுதி கட்டத்தில் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் லக்னோ அணியின் பேட்டிங்கின் போது அப்துல் சமாத்தை ரன் அவுட் செய்தார் தோனி. அவர் ரன் அவுட் செய்த விதத்தை குறித்து அனைவரும் அவரை பெருமையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில், தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், தோனியின் விக்கெட் கீப்பிங்கில் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன். தோனி தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். அவர் நீண்ட காலமாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மிகவும் அற்புதமானவர். இன்று அவரது கேப்டன்சி மிகவும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது.
தோனி சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாற்றங்களை செய்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து பந்து வீச செய்தார். அவர்கள் போட்டியின் வேகத்தை மாற்றினார்கள். ஆடுகளத்தை தங்களுக்கு எற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்கள். விக்கெட்களையும் எடுத்தார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் படிங்க: CSK: மிரட்டிய ஷேக் ரஷீத்… ஆனால் அடுத்த போட்டியில் ஓபனிங்கில் வர மாட்டார் – ஏன்?
மேலும் படிங்க: ஐபிஎல்லில் MOM விருதை பெற்ற 7 வயதான வீரர்கள்.. டிராவிட்டுடன் இணைந்த தோனி.. முழு பட்டியல் இதோ!