சென்னை என் சி இ ஆர் டி வெளியிட்டுள்ள ஆங்கில பாட புத்தகத்தின் பெயர் இந்தியில் உள்ளதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு […]
