கர்​நாட​கா​வில் லாரி உரிமை​யாளர்​கள் வேலைநிறுத்​தம்: ஓசூர் அருகே பல மணி நேரம் நிறுத்​தப்​பட்ட லாரி​கள்

ஓசூர்: டீசல் மற்​றும் சுங்​கக் கட்டண உயர்​வைக் கண்​டித்​து, கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நேற்று வேலைநிறுத்​தப் போராட்​டத்தை தொடங்​கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரி​கள் பல மணி நேரம் நிறுத்​தப்​பட்​டிருந்​தன.

கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் அறி​வித்த வேலைநிறுத்​தம் காரண​மாக நேற்று முன்​தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரி​கள் அனைத்​தும், தமிழக எல்​லை​யான ஓசூர் ஜுஜு​வாடி​யில் நிறுத்​தப்​பட்​டன.

அதேநேரம், வடமாநிலங்​களி​லிருந்து கர்​நாடகா வழியாக வடமாநில பதிவெண் கொண்ட லாரி​கள் ஓசூர் வழி​யாக வழக்கம்​போல இயங்​கின. இந்​நிலை​யில், நேற்று காலை 10 மணிக்கு மேல் தமிழக-கர்​நாடக எல்​லை​யில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரி​கள் படிப்​படி​யாக இயக்​கப்​பட்​டன. இதனிடையே, கர்​நாடக மாநிலம் அத்​திப்​பள்​ளி​யில் உள்ள அம்​மாநில வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கம் முன்பு கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்கள் சங்​கம் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. பின்னர், அம்மாநில போக்​கு​வரத்து இணை ஆணை​யர் ஷோபா​விடம் லாரி உரிமை​யாளர்​கள் கோரிக்கை மனு அளித்​தனர்.

தென் மாநில லாரி உரிமை​யாளர்​கள் நலச் சங்​க பொதுச் செயலா​ளர் சண்​முகப்பா கூறும்போது, டீசல் விலை​யைக் குறைக்​கா​விட்​டால் போ​ராட்​டம் தீவிரமடை​யும்​ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.