சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேரவையில் அறிமுகம் செய்தார். அப்போது, எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
