CSK Latest Update In Tamil: சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் உள்ளது. இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த மூன்று விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி 2010 ஆம் ஆண்டு கோப்பையை வென்றபோது, இதே மாதிரி தான் முதல் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனாலும் அந்த தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல் தற்போது நடக்குமா? என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.
ராகுல் திருப்பாதி கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், தற்போது பேட்டிங்கே மறந்துவிட்டது போல் அவர் ஒவ்வொரு பந்தையும் எதிர் கொள்கிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே அணியில் எப்படி ஷேக் ரஷீத் அபாரமாக விளையாடினாரோ அதைவிட அதிரடியாக ஆடக்கூடிய வான்ஷ் பேடி என்ற ஒரு வீரர் இருக்கிறார். அவர் பிரீமியர் லீக் தொடரில் 200க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார்.
ராகுல் திருப்பாதியை நீக்கிவிட்டு வான்ஷ் பேடியை மூன்றாவது வீரராக சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போன்று ஆயுஷ் மாத்ரே என்ற 17 வயது வீரரை சிஎஸ்கே அணி தற்போது தேர்வு செய்துள்ளது. இதனால் ஆயுஷ் மாத்ரேவுக்கு பிளேயிங் 11ல் இடம் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
விஜய் சங்கர் நல்ல வீரராக இருந்தாலும் தற்போது மாறிவரும் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அவர் ஏற்ற வீரர் கிடையாது என்பது தான் ரசிகர்களின் வாதமாக இருக்கின்றது. பேட்டிங்கில் சிஎஸ்கே அணி இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே தொடர் வெற்றிகளை பெற முடியும். இல்லையென்றால் இந்த வெற்றி ஏதோ அத்தி போத்தது போல் மாறிவிடும்.
பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் எஞ்சி இருக்கும் ஏழு போட்டிகளில் குறைந்தபட்சம் ஆறு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இது கொஞ்சம் கடினமான காரியம்தான் என்றாலும் கடந்த காலங்களை வைத்து பார்த்தால் கண்டிப்பாக இது சாத்தியம் தான்.