`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
`லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் சார் பக்கத்தில் நின்றால் கூட போதும்
இந்நிலையில் தனது புதிய படமான ’45’ படத்துக்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் உபேந்திரா ‘கூலி’ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னை வந்து சந்தித்துக் கதைச்சொல்லத் தொடங்கியப்போது கதை எல்லாம் சொல்ல வேண்டாம்.
ரஜினிகாந்த் சார் பக்கத்தில் நின்றால் கூட போதும் என்றேன். நான் ஏகலவைன் ரஜினிகாந்த் எனக்கு துரோணாச்சாரியார். அவரை அந்த அளவிற்கு நான் ஃபாலோ செய்கிறேன். அவருடைய படத்தில் நடிக்க நான் ஆசீர்வாதிக்கப்பட்டவன். ‘கூலி’ படத்தில் நான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, அமீர் கான் காம்பினேஷன் சீன் தியேட்டரைத் தெறிக்கவிடும்.

நான்கு மொழிகளிலும் உள்ள முன்னணி நட்சத்திரங்களும் ஒரே ஃப்ரேமில் வரும் போது ப்ளாஸ்டாக இருக்கப்போகிறது. அந்த காட்சியைத் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ‘கூலி’ படத்தில் அமீர்கான் நடிப்பது ஊறுதியாகி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…