சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து மே மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த மாதம் இறுதிவரை தேர்வுகள் திட்டமிட்டிருந்த நிலையில், […]
