ஷிம்லா,
இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி விதவை ஓய்வூதிய பணத்தை பெற்று வந்தார். 16 ஆண்டுகள் கழித்து பதன்கோட் கோர்ட்டில் சுரீந்தர் சிங் ஆஜராகியிருப்பது அதிகாரிகளையும், குடும்பத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மனைவி மீனா குமாரி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கிற்கு பயந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தது தெரிய வந்தது. ராணுவத்தால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுக்க விரும்பிய சுரீந்தர் சிங், கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.