ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பேஷன் பிளஸ் 100சிசி மாடலில் OBD-2B பெற்றதாகவும், கூடுதலாக ஸ்டைலிங் நிறங்களில் சிறிய மாற்றத்துடன் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு ரூ.1,750 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூ.81,041 எக்ஸ்ஷோரூம் ஆக நிர்ணயம் செய்துள்ளது.
பேஷன் பிளஸ் 100cc பைக்கில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன் கூடிய 97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் பெற்று அதிகபட்சமாக 8.02 bhp பவர், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
புதிய 2025 மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்றதை தவிர மற்றபடி எந்த வசதிகளிலும் மாற்றமும் இல்லை, I3S, சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், டிஜி அனலாக் கிளஸ்ட்டருடன் வீலில் சில்வர் நிற ஸ்டிரிப் பெற்றதாகவும், கருப்பு நிறத்துடன் பிரவுன் ஸ்டிரிப்ஸ், கருப்புடன் நீளம், கருப்பு நிறத்துடன் கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் என ஒட்டுமொத்தமாக 4 நிறங்களை கொண்டுள்ளது.
வழக்கமான மாடலை விட கூடுதல் சென்சார் பெற்ற OBD-2B கொண்ட பேஷன் பிளஸ் விலை ஆயிரத்து 750 வரை உயர்த்தப்பட்டுள்ளது.