சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப்போகும் மெகா அதிரடி பிளேயர்..!

Dewald Brevis CSK : ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சிறப்பாக விளையாடவில்லை. தோனி கேப்டனாக பொறுப்பேற்றவுடன் 2 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி தோல்விகளை பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதனை கருத்தில் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களில் டாப் ஆர்டரை வலுப்படுத்த ஸ்கெட்ச் போட்டு வருகிறது. ஏனென்றால் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி ஆகியோர் எதிர்பார்த்தளவுக்கு விளையாடவில்லை. அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டதால் இப்போது சிஎஸ்கே இளம் பிளேயர்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

அதேநேரத்தில் புதிய பிளேயர்களை அணிக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ஏற்கனவே மும்பை இளம் பிளேயர் ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெளிநாட்டு பிளேயருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்தது. இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு மஞ்சள் நிறத்திலான போட்டோவை அப்லோடு செய்திருக்கிறார். அதில் அவர் எந்த கேப்சனும் போடவில்லை என்றாலும் சிஎஸ்கே அணியுடன் அவர் இணைய உள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கொளுத்தி போட்டுள்ளனர்.

டெவால்ட் ப்ரீவிஸ் இளம் அதிரடி பேட்ஸ்மேன், கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். எதிர்பார்த்தளவுக்கு சிறப்பாக ஆடவில்லை என்பதால் அவரை அணியில் இருந்து விடுவித்தது மும்பை. இந்த முறை எந்த ஐபிஎல் அணியிலும் டெவால்ட் ப்ரீவிஸ் இடம்பெறவில்லை. இந்த சூழலில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் கலர் புகைப்படத்தை அப்லோடு செய்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவர் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் சோஷியல் மீடியாவில் ரெக்கைகட்டி பறக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் டார் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடத்தை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், இளம் பிளேயர்களை எல்லா போட்டிகளிலும் பயன்படுத்த முடியாது என்பதில் தெளிவாக இருக்கும் சிஎஸ்கே, அனுபவம் வாய்ந்த பிளேயர் ஒருவரை அணிக்குள் கொண்டு வருவதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கியுள்ளது. அந்த வழியில் டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணையவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.