நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ.
வரும் மே 1ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்று சென்னையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லரை அல்போன்ஸ் புத்திரன் எடிட் செய்துள்ளார்.
ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் லவ் டீடாக்ஸ் என்ற பாடலுக்கு பர்ஃபார்ம் செய்தார் ட்ரெண்டிங் டான்சர் ரம்யா ரங்கநாதன்.
பின்னர் சர்பிரைஸாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த பாடலை நடிகர் சூர்யாதான் பாடியதாகத் தெரிவித்தார். ரசிகர்கள் கரகோஷம் எழுந்தது.
“இந்த மேடைக்காக சொல்லவில்லை, உண்மையாகவே சூர்யா சார் மிகவும் நன்றாக பாடினார்” என்றார் சந்தோஷ் நாராயணன். லவ் டீடாக்ஸ் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Retro
2டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹஃபீக் முகமது அலி படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ், சூர்யா இணைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.