டெல்லி: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார். மசோதாவுக்கு அனுமதி மற்றும் குடியரசு தலைவருக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஆளுநர் ரவியின் டெல்லி விசிட் பரபரப்பாக பேசப்படுகிறது. பல்கலைக்கழக வேந்தர் தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் […]
