ஹோண்டா கார்ஸ் இந்திய நிறுவனத்தின் பிரபலமான காம்பேக்ட் ரக மூன்றாம் தலைமுறை அமேஸ் செடான் மற்றும் எலிவேட் என இரண்டிலும் சிஎன்ஜி ஆப்ஷனை டீலர்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்டில் பொருத்திக் கொள்ளலாம் என அதிகராப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் வாரண்டி, விலை போன்ற விபரங்களை நேரடியாக தெளிவுப்படுத்தவில்லை.
எலிவேட் எஸ்யூவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபத்தில் ஜப்பான் சந்தையில் சோதனை செய்யப்பட்ட கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. எலிவேட்டில் 89 kW (119 hp) மற்றும் 145 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் சிவிடி என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
எலிவேட் எஸ்யூவி விலை ரூ.11.91 லட்சம் முதல் ரூ.16.73 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அடுத்து, மூன்றாம் தலைமுறை அமேஸ் செடானில் 66 kW (88 hp) மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் சிவிடி என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
2025 அமேஸ் விலை ரூ.8.09 லட்சம் முதல் ரூ.11.19 லட்சம் வரை அமைந்துள்ளது. மேலும், டாப் வேரியண்டில் ADAS சார்ந்த பாதுகாப்பு தொகுப்பினை பெற்றுள்ளது.