Rinku Singh Marriage : ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) எம்பி பிரியா சரோஜ் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். அவர்களின் நிச்சயதார்த்த தேதி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. சமூகவலைதளங்களில் வெளியான தகவல்களின்படி, அவர்களின் நிச்சயதார்த்தம் ஜூன் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. இரு குடும்பங்களும் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதாகவும், இருவரின் நிச்சயதார்த்த விழாவும் லக்னோவில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதம் நிச்சயதார்த்தம்
சிக்ஸர் கிங் என்று பிரபலமாக அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் மலிஷஹர் தொகுதியின் சமாஜ்வாடி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நிச்சயதார்த்தம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது, அதற்காக இருவரின் குடும்பத்தினரும் ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு கிரிக்கெட் வீரரின் வீட்டில் ரிங்கு சிங்கும் பிரியா சரோஜும் முதல் முறையாக சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
யார் யார் கலந்து கொள்கிறார்கள்?
இந்த நிச்சயதார்த்த விழா லக்னோவில் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் கிரிக்கெட் உலகத்தைத் தவிர, வேறு பலரும் இதில் பங்கேற்கலாம். இருப்பினும், இரு குடும்பத்தினரும் இன்னும் தேதியை இறுதி செய்யவில்லை. நிச்சயதார்த்தத்தை மறக்கமுடியாததாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன, இந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் ஒரு பிரமாண்டமான விழாவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
இருவரின் குடும்பத்தின் நெருங்கிய உறவினரின் கூற்றுப்படி, ஜோதிடர்கள் ஜூன் 2, 4, 5, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளை நல்ல நாட்களாக குறித்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. அவற்றில் ஒன்று இறுதி செய்யப்படும். தற்போது ரிங்கு சிங் ஐபிஎல் 2025ல் பிஸியாக இருக்கிறார், பிரியா சரோஜ் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் காரணமாக பிஸியாக இருக்கிறார். எனவே ஜூன் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடத்துவதில் குடும்பத்தினர் உறுதியாக இருக்கின்றனர்.
பிரியா சரோஜ் யார்?
பிரியா சரோஜ் தற்போதைய எஸ்பி எம்எல்ஏ தூபானி சரோஜின் மகள். பிரியா சரோஜ் வாரணாசியின் பிந்த்ரா தாலுகாவில் உள்ள கார்கியான் கிராமத்தில் வசிப்பவர். அவர் 7 ஆண்டுகளாக சமாஜ்வாடி கட்சியில் இருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில், அதாவது அவருக்கு அப்போது 25 வயது 7 மாதங்கள் வயதில் சமாஜ்வாடி கட்சி சார்பில் மச்லிஷஹர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதனால் உத்தரப்பிரதேசத்தில் மிக குறைந்த வயதில் எம்பியான இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றார்.
ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் இருவரும் ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்தவர்கள். பிரியாவும் ரிங்குவும் ஒரு பொதுவான நண்பர் மூலம் டெல்லியில் சந்தித்தனர். அந்த நண்பரின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும். குடும்பங்களின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த உறவு இறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு, இரண்டு இடங்களில் வரவேற்பு இருக்கும். ஒரு வரவேற்பு பிரியா சரோஜ் சார்பில் ஜான்பூரில் நடைபெறும், மற்றொன்று அலிகாரில் நடைபெறும்.