மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் மிட்செல் சான்ட்னர் ரசிகர்களுக்கு முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார். சக டீம் மேட் கரன் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றும் தெரிவித்துள்ளார். கரண் சர்மா ஐபிஎல் 2025 தொடரில் தனது முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இன்பாக்ட் வீரராக வந்த அவர் மூன்று விக்கெட்களை எடுத்து போட்டியை மும்பை பக்கம் திருப்பினார். இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத டெல்லி கேபிட்டல்ஸை மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கரன் சர்மா காயம் காரணமாக பில்டிங்கில் இடம் பெறவில்லை. மேலும் தனது ஓவர்களையும் முழுவதுமாக முடிக்கவில்லை.
மேலும் படிங்க: பட்லர், ரூதர்ஃபோர்ட் அதிரடி ஆட்டம்.. முதல் இடத்திற்கு முன்னேறிய குஜராத் அணி!
கரண் சர்மா காயம்!
“கரண் சர்மாவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் எங்களுடன் அணியில் தான் இருக்கிறார், ஆனால் அவர் பந்து வீச முடியுமா முடியாதா என்பது தெரியவில்லை. பெரிய காயம் போல் தான் தோன்றுகிறது” என்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் பேசிய மிட்செல் சான்ட்னர், “கரன் சர்மாவுடன் சமீபத்தில் சில தொடர்களில் விளையாடினேன். அவர் பல திறமைகளை தன்னுல் வைத்துள்ளார். நெட்ஸ்களில் அவர் பந்து வீசுவதை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். கடந்த போட்டியை போலவே சென்னைக்கு எதிரான போட்டியில் பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தால் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.
The aura of Super Kings began! #OnThisDay #WhistlePodu #Yellove pic.twitter.com/YiKNM88qRC
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2025
எங்கள் அணியில் இருக்கும் மற்ற ஸ்பின்னர்களும் திறமையாக பந்து வீசக்கூடியவர்கள். கரண் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவாரா மாட்டாரா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. மும்பை மைதானம் எப்போதும் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும்” என்று மிட்செல் சான்ட்னர் தெரிவித்தார். இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. அதேபோல இரு அணிகளுக்கும் கடைசியாக நடைபெற்ற சில போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்று வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்லுமா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் உத்ததேச பிளேயிங் 11: ரியான் ரிக்கல்டன் (WK), ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (C), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, விக்னேஷ் புதூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்ததேச பிளேயிங் 11 :ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா/பிரேவிஸ், ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (C), விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, நூர் அகமது, மதீஷா பத்திரனா, சிவம் துபே
மேலும் படிங்க: SRH-ன் மோசமான விளையாட்டிற்கு காரணம் இதுதான்.. போட்டுடைத்த மைக்கேல் கிளார்க்!