முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரப்சிம்ரன் சிங் – பிரியன்ஷ் ஆர்யா 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்தனர். இவர்களில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்திலேயே பிரம்சிம்ரன் சிங்கும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும், நேஹல் வதேரா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜோஷ் இங்கிலிஸ் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார். இறுதி கட்டத்தில் ஷசாங்க் சிங் ( 31ரன்கள்), மார்கோ ஜான்சன் ( 25 ரன்கள்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் பஞ்சாப் அணி ஒரளவு நல்ல நிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்துள்ளது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்கியது .
தொடக்கத்தில் பில் சால்ட் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து வந்த படிக்கல், விராட் கோலியுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் .
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். படிக்கல் 61 ரன்களில் வெளியேறினார் . ரஜத் படிதார் 12 ரன்களில் வெளியேறினார் . தொடர்ந்து விராட் கோலி சிறப்பாக விளையாடினார். இதனால் 18.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு 159 ரன்கள் எடுத்தது . இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது .