இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் உள்ள அவரது பெயரை நீக்க ஹைதராபாத் கிரிக்கெட் சங்க குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் (HCA) தலைவராக அசாருதீன் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2023 செப்டம்பர் வரை அதன் தலைவராக நீடித்த நிலையில் அசாருக்கு தொடர்புடையவர்கள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு […]
