நேற்றையப் (ஏப்ரல் 21) போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்று தற்போது ஆறாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நேற்றைய ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பெரிய இலக்கை துரத்த போகிறோம் என்று நினைத்தோம்.

ரோஹித் பற்றி கவலைப்பட தேவையில்லை!
ஆனால் சிஎஸ்கே அடித்தது மிகவும் குறைவான ஸ்கோர்தான். ரோஹித் சர்மாவும், சூரியகுமார் யாதவும் விளையாடும் விதத்தை பார்க்கும்போது நிம்மதியாக இருந்தது. ரோஹித் பற்றி கவலைப்பட தேவையில்லை.
ஏனென்றால் சிறப்பாக விளையாடுவார் என்று எங்களுக்கு தெரியும். ரோஹித் சர்மா அதிரடியை காட்டினால் எதிரணி நிச்சயம் தோற்றுவிடும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து நன்றாக விளையாடுகிறார்கள்.

நாங்கள் கிரிக்கெட்டின் அடிப்படை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம். நாங்கள் மேஜிக் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.