சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் செய்த தவறு என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டெவோன் கான்வேவை ரூ. 6.25 கோடிக்கும் ராகுல் திரிபாதியை ரூ. 3.4 கோடிக்கும் ரச்சின் ரவீந்திராவை ரூ. 4 கோடிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கும் கலீல் அகமதை ரூ. 4.8 கோடிக்கும் நூர் அகமதை ரூ. 10 கோடிக்கும் வாங்கியது. இதில் நூர் அகமது மற்றும் கலீல் அகமது மட்டுமே நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற எந்த வீரர்களும் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, சென்னை அணி ஏலத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் கூறுகையில், நீங்கள் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல் போன்றவர்களை விட்டுவிட்டீர்கள். அணி நிர்வாகம் மற்றும் தலைமை பயிற்சியாளரும் நல்ல வீரர்களை வாங்க முயற்சி செய்யவில்லை. 

சிறப்பாக விளையாடும் பல வீரர்கள் இருந்தும் சென்னை அணி அவர்களை வாங்கவில்லை. தங்களிடம் அதிக பணம் இருந்தும் சென்னை அணி அதை செய்யவில்லை. இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி தடுமாறியதை பார்த்ததே இல்லை என சுரேஷ் ரெய்னா கூறினார். 

மெகா ஏலத்திற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 65 கோடிக்கு ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தோனி, துபே மற்றும் பதிரானாவை தக்க வைத்து இருந்தது. ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 120 கோடி அளிப்பட்ட நிலையில், அதில் ரூ. 65 கோடியில் சென்னை அணி வீரர்களை தக்க வைத்தது. மீதமுள்ள ரூ. 55 கோடியை வைத்து தான் மற்ற வீரர்களை சென்னை அணி ஏலத்தில் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: இந்த 4 வீரர்களை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

மேலும் படிங்க: ஆத்தாடி! ஐபிஎல் சியர் கேர்ள்ஸ்க்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா? அதுவும் ஒரு மேட்ச்சுக்கு..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.