லாகூர்,
ஐ..பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில்
இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையை சூர்யவன்ஷி படைத்தார். அத்துடன் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி கெரியரை அற்புதமாக தொடங்கினார். இது அனைவரது மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்தில் சிக்சர் அடிக்காமல் அவுட்டாகி இருந்தால் பாகிஸ்தான் மக்கள் அவரை வெளியே எறியுங்கள் என்று கூறியிருப்பார்கள் என அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “14 வயது சிறுவன், வைபவ் சூரியவன்ஷி. முதல் பந்தை சிக்சர் அடிக்க முயன்று அவர் அவுட்டாகி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? பாகிஸ்தானில், மக்கள் அவரை வெளியே எறியுங்கள் என்று சொல்வார்கள்.
ஆனால் இந்தியாவில் நம்பிக்கை அளிக்கப்படுகிறது. பின்னர் அது பலனளிக்கிறது. இந்தியாவில் நீங்கள் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜெய்ஸ்வால், கில் ஆகியோரைப் பாருங்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட நம்பிக்கையும் சுந்தந்திரமும் அவர்கள் பெரிய வீரர்களாக மாற உதவியது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து விளையாடினால், அவர்கள் நிச்சயமாக சிறந்த வீரர்களாக மாறுவார்கள்.
ஐ.பி.எல். தொடரை நம்பர் 1 என்று நான் அழைக்கும்போது இங்குள்ளவர்கள் (பாகிஸ்தான்) மோசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்வதெல்லாம் தங்கள் நேரத்தை வீணாக்குவதுதான். இந்த சீசனில் (ஐபிஎல்) நேஹல் வதேரா, பிரியன்ஷ் ஆர்யா, அப்துல் சமத், அஸ்வனி குமார் என ஏராளமான திறமையாளர்களை பாருங்கள். குறிப்பாக மயங்க் யாதவை நான் பார்க்க விரும்புகிறேன். அவரது பந்துவீச்சை நான் உண்மையில் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.