கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை அந்த அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் அடித்துள்ளது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடும் நிகழ்வின்போது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான டேனி மோரிசன், சுப்மன் கில்லிடம், “நீங்க நல்லா இருக்கீங்க, விரைவில் உங்களுக்கு திருமணமா?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுப்மன் கில், “இல்லை, அப்படி எதுவும் இல்லை” என்று கூறினார்.