ஃபிரான்சை தொடர்ந்து ரெனால்ட் நிறுவனம் தனது இரண்டாவது மிகப்பெரிய டிசைன் ஸ்டூடியோவை சென்னையில் துவங்கியுள்ள நிலையில், இந்த மையத்தால் இந்திய சந்தைக்கான மாடல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள கார்களை வடிவமைக்கவும், 5 கார்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, ரெனால்ட் டஸ்ட்டர், 7 இருக்கை பிக்ஸ்டெர், கிகர் 2026, மற்றும் ட்ரைபர் 2026 ஆகிய மாடல்களுடன் முதல் எலக்ட்ரிக் காரினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தைக்கு கொண்டு வரவுள்ள இந்நிறுவனம், சென்னை ஆலையை முழுமையாக நிசான் நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தியுள்ளது.
Renault Design Centre Chennai (RDCC)
ஏற்கனவே, 2005 ஆம் ஆண்டு புனேவில் டிசைன் மையத்தை துவங்கியிருந்த ரெனால்ட் நிறுவனம், அதனை தொடர்ந்து தற்பொழுது துவங்கியுள்ள புதிய சென்னை டிசைன் மையம் 1.5 மில்லியன் யூரோ (ரூ.14.68 கோடி) மதிப்பில் 1500 சதுர மீட்டர் பரப்பளவில் துவங்கப்பட்டுள்ள ஸ்டூடியோவில், இந்திய மட்டுமல்லாமல் ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கான மாடல்களும் டிசைன் செய்யப்பட உள்ளன.
சமீபத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட R4 மற்றும் R5 EVகள் முந்தைய சென்னை ஸ்டுடியோவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டதாகும்.
மேலும், இந்நிறுவனம் R Store என்ற புதிய கான்செப்ட்டை கொண்ட டீலர்களை நாடு முழுவதும் இந்நிறுவனம் விரிவுப்படுத்தி வருகின்றது.
சென்னை ரெனால்ட் டிசைன் சென்டரை (RDCC) ரெனால்ட் குழுமத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி லாரன்ஸ் வான் டென் அக்கர், ரெனால்ட் இந்தியா விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பிரான்சிஸ்கோ ஹிடால்கோ, ரெனால்ட் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் வெங்கட்ராம் மாமில்லபல்லே மற்றும் இந்தியா டிசைன் ஸ்டுடியோ தலைவர் ஜூலியன் சபாட்டியர் ஆகியோர் திறந்து வைத்தனர்.