நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 40வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 22) லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இவர்கள் வழக்கம் போல் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து ரன்களை குவித்தனர். டெல்லி அணிக்கு முதல் வீக்கெட்டை வீழ்த்த 87 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டடிருந்தது. மார்க்ரம் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த பூரன் 9, அப்துல் சமாத் 2 என ஒற்றை ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷும் 45 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ அணி ரன்களை குவிக்க தவரியது. முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் இருந்த லக்னோ அணி அடுத்த 10 ஓவரில் 63 ரன்களை மட்டுமே சேர்த்தது. இறுதி கட்டத்தில் பதோனி 36 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரரான கருண் நாயர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அபிஷேக் போரல் மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் நின்று ரன்களை சேர்க்க தொடங்கினர். ஒருகட்டத்தில் அபிஷேக் போரல் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் களத்திற்கு வந்தார். அவர் 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். மறுபக்கம் கே.எல். ராகுல் 57 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 17.5 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வீழ்ந்த இரண்டு விக்கெட்களையும் மார்க்ரமே எடுத்திருந்தார். இதன் மூலம் லக்னோ அணி தனது 4வது தோல்வியை தழுவி உள்ளது.
மேலும் படிங்க: அவரே அவரை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும்.. ரோகித்தை விளாசிய முன்னாள் ஆஸி கேப்டன்!
மேலும் படிங்க: சிஎஸ்கே-வின் புதிய பயிற்சியாளர் இவரா? காத்திருக்கும் குட் நியூஸ்!