LSG vs DC: "அதிரடி வேண்டும் என்பதால் மில்லரை இறக்கினோம்; ஆனால்…" – தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதின.

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது.

DC vs LSG - அக்சர் படேல், ரிஷப் பண்ட்
DC vs LSG – அக்சர் படேல், ரிஷப் பண்ட்

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.  

“யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன.

எங்களால் போதிய அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை. லக்னோவில் எப்போதுமே இது நடக்கின்றது.

இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. இதுதான் இங்கு நிலைமையாக இருக்கின்றது.

இருப்பினும் இதையெல்லாம் ஒரு காரணமாக நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. இதிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் ஆயுஷை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்துகின்றோம். மாயங் யாதவ்க்கு இன்னும் சில நேரம் பயிற்சி தேவைப்படுகின்றது. சரியான நேரத்தில் அவர் அணிக்குள் வருவார் என்று நம்புகின்றேன்.

lsg vs dc
lsg vs dc

அதிரடி வீரர் ஒருவரைக் களத்திற்கு அனுப்புவதற்காகத்தான் மில்லரை நான் கொண்டு வந்தேன். ஆனால் பந்து நின்று வந்ததால் எந்த பேட்ஸ்மேனாலும் ரன் அடிக்க முடியவில்லை.

எங்கள் அணியில் சிறந்த காம்பினேஷன் எது என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்”  என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.