CSK-வில் இந்த 3 பேர் வேண்டவே வேண்டாம்… பிரேவிஸ் வேண்டும் – வெற்றிகளை குவிக்க இதுவே ஒரே வழி!

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2025) இன்னும் 6 போட்டிகளே உள்ளன. 3 போட்டிகள் சேப்பாக்கத்திலும், மற்ற 3 போட்டிகள் பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் நகரங்களில் நடைபெற இருக்கிறது. 

தற்போது 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில் தத்தளிக்கும் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு (CSK Play Off Chance) வர வேண்டும் என்றால் இந்த 6 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்றாக வேண்டும். வெற்றி பெறுவது மட்டுமின்றி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக நெட் ரன்ரேட்டை பெற்றால்தான் சிஎஸ்கேவுக்கு அந்த பிளே ஆப் கனவே பலிக்கும் எனலாம்.

Chennai Super Kings: இந்த 3 வீரர்கள் வேண்டாம்

இந்த சூழலில், நிச்சயம் சிஎஸ்கே அணி பலமான பிளேயிங் லெவனை (CSK Playing XI) அமைக்க வேண்டும். இதுவரை 20 வீரர்களை பயன்படுத்திவிட்டோமே, மேலும் புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவர வேண்டுமா என யோசிக்காமல் சில தைரியமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கண் கெட்டதற்கு பின்னர் சூர்ய நமஸ்காரம் செய்வதை காட்டிலும் இப்போதே பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை எடுத்தாக வேண்டும். அதிலும் குறிப்பாக, தற்சமயத்திற்கு சிஎஸ்கே அணி அஸ்வின் (Ravichandran Ashwin), விஜய் சங்கர் (Vijay Shankar), ரச்சின் ரவீந்திரா (அ) ஓவர்டன் பிளேயிங் லெவனில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.

Chennai Super Kings: அனுபவம் பெற்று வரும் டிவால்ட் பிரேவிஸ்

முன்பு சொன்னது போல், டிவால்ட் பிரேவிஸ் (Dewal Brevis) மற்றும் அன்ஷூல் கம்போஜிற்கு (Anshul Kamboj) சிஎஸ்கே வாய்ப்பளிக்க வேண்டும். டிவால்ட் பிரேவிஸ் கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்காவிட்டாலும் சமீப காலங்களில் SA20, கரீபியன் பிரீமியர் லீக் (CPL), அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போன்ற லீக் கிரிக்கெட் தொடர்களல் நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார். 

சிஎஸ்கேவில் மிடில் ஆர்டர்களில் ரன்கள் குறைவாக வருவதும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. விக்கெட் சரிந்தாலும் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடும் வீரர்களும் சிஎஸ்கேவுக்கு தேவை. அதற்கு பிரேவிஸ் சரியான தேர்வுதான். விஜய் சங்கருக்கு பதில் உங்களது இளம் வீரரான வன்ஷ் பேடிக்கு (Vansh Bedi) ஒரு வாய்ப்பை வழங்கலாம்.  

Chennai Super Kings: ரச்சின் ரவீந்திரா vs ஓவர்டன்

பிரேவிஸ் உள்ளே வந்தால் ரச்சின் ரவீந்திராவை (Rachin Ravindra) நீக்கியாக வேண்டும். அவர் சில போட்டிகளில் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் அடித்தார். அதன்பின் அவர் சோபிக்கவில்லை. எனவே, பிரேவிஸிற்கு பதில் ரச்சின் ரவீந்திராவை நீக்க வேண்டும். ரச்சின் உங்களது எதிர்கால திட்டத்தில் இருந்தால் ஓவர்டனை (Overton) ஓரம் கட்டிவிடலாம்.

Chennai Super Kings: சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர்

இதனால், சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர் ரச்சின் – ஷேக் ரஷீத் – ஆயுஷ் மாத்ரே – டிவால்ட் பிரேவிஸ் – ஷிவம் தூபே – வன்ஷ் பேடி – தோனி – ஜடேஜா என இருக்க வேண்டும். ரச்சின் இல்லாத சூழலில் ஓவர்டனை சேர்க்கலாம். ரஷீத் – மாத்ரே ஜோடி ஓபனிங்கில் இறங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.