வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ள RE HunterHood விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ஹண்டர் 350 பைக்கில் புதிய எல்இடி விளக்குகள், நிறங்களுடன் சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றத்தை பெற்றதாக வரவுள்ளதை சமீபத்தில் வெளியான படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹண்டர் 350 விற்பனை எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக ரூ.1.50 லட்சத்தில் துவங்குவது மற்றும் இளைய தலைமுறையினர் விரும்பும் வடிவமைப்பு மிக முக்கிய காரணமாக உள்ளது.
2025 ஹண்டரில் மற்ற என்ஃபீல்டு பைக்குகளில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட், புதிய டெயில்லைட் பெற்று பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு விற்பனையில் உள்ள மாடலை விட மேம்பட்டதாக இருக்கும் என்பதனால் ரைடிங் அனுபவம் மேம்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட நிறங்கள், வீல் ஸ்டிரீப், லோகோ உள்ளிட்ட இடங்களில் சில மேம்பாடுகளை கொண்டிருந்தாலும் கிளஸ்ட்டர் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. விலை தொடர்ந்து ஆரம்ப நிலை வேரியண்ட் 1.50 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
image source – motorcent