ஐஷரின் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அடுத்த 650சிசி மாடலாக புல்லட் 650 ட்வீன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஏற்கனவே கிளாசிக் 650 ட்வீன் உட்பட 6 வகைகளில் 650சிசி மாடல்கள் கிடைக்கின்றன.
உலகில் மிக நீண்ட நாட்களாக உற்பத்தி செய்யப்படுகின்ற மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றுள்ள புல்லட் மாடலில், கூடுதலாக வரவுள்ள புதிய 650சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்ற சக்திவாய்ந்த மாடலாக உருவெடுக்க உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட படங்கள் வெளியாகிருந்தது.
விற்பனையில் உள்ள புல்லட் 350 பைக்கிலிருந்து பெறப்பட்ட டியர்டிராப் பெட்ரோல் டேங்க் உட்பட வட்ட வடிவ ஹெட்லைட் வழக்கமான ரெட்ரோ ஹாலஜென் பல்ப் பெறக்கூடுமா அல்லது எல்இடி ஹெட்லைட் பெறுமா என உறுதியாக தெரியவில்லை.
செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் வசதி, புல்லட் பைக்குகளுக்கு உரித்தான ஸ்டைலிங் நிறங்களுடன் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு அனேகமாக நடப்பு ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள EICMA 2025 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு 2025 இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் கிடைக்கலாம்.